நாகை, மார்ச் 2: நாகப்பட்டினம் மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தில் பொது விநியோகத் திட்ட ரேஷன் பொருட்கள் இன்றும், நாளையும் வீடுதேடி சென்று வழங்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். நாகை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நாகப்பட்டினம் மாவட்டத்தில் பொது விநியோக திட்ட ரேஷன் பொருட்கள் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின்கீழ் 2026 மார்ச் 2 (திங்கள்) மற்றும் மார்ச் 3ம் தேதி (செவ்வாய்) ஆகிய தேதிகளில் 65 வயதிற்கும் மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது. தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்கள் மேற்கண்ட திட்டத்தினை பயன்படுத்தி பயன்அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
