கோடியக்கரையில் உலக கடற்புற்கள் தின விழா

வேதாரண்யம், மார்ச் 2: நாகப்பட்டினம் வனக்கோட்டம், வேதாரண்யம் வனச்சரகம் சார்பில் கோடியக்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக கடற்புற்கள் தின விழா நடைபெற்றது. விழாவிற்க்கு வன உயிரினக் காப்பாளர், ரமேஷ்வரன் தலைமை வகித்தார். கோடியக்கரை வனச்சரக அலுவலர் ஜோசப் டேனியல் முன்னிலை வகித்தார். வன உயிரின ஆராய்ச்சியாளர் முனைவர் சிவகணேசன் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் வெற்றிவேலன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

சூழல் மண்டலத்தில் கடற்தாழைகளின் பங்களிப்பு, உணவுச் சங்கிலியில் கடல் புற்களின் முக்கியத்துவம், பல்லுயிரினப் பெருக்கத்தில் கடல் புற்களின் பங்கு ஆகியவை குறித்து கலந்துரையாடப்பட்டது. இந்நிகழ்வில், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் வனத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் மாணவ, மாணவிகள் வனத்தினை நேரில் கண்டு களப்பயணத்தில் தமது அனுபவங்களை மாவட்ட வன உயிரினக் காப்பாளர்ளுடன் பகிர்ந்து கொண்டனர். முடிவில் பேராசிரியர் வனவர் இளஞ்செழியன் நன்றி கூறினார்.

 

Related Stories: