கொள்ளிடம் பகுதியில் ஒரே மாதத்தில் 15 இளம் பெண்கள் மாயம்

கொள்ளிடம், பிப்.28: கொள்ளிடம் பகுதியில் ஒரே மாதத்தில் 15 இளம் பெண்கள் மாயமானது குறித்து போ லீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் ஆணைக்காரன்சத்திரம் காவல் நிலையத்தில் இம்மாதத்தில் 15 வழக்குகள் இளம் பெண்கள் மாயமானதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கொள்ளிடம் அருகே புத்தூரில் அரசு கல்லூரி இயங்கி வருகிறது.

இக் கல்லூரியில் படித்து வரும் மாணவிகள் மற்றும் சென்ற வருடம் பட்டப் படிப்பு முடித்த மாணவிகள் உள்ளிட்ட 15 மாணவிகள் மாயமாகி உள்ளதாகவும், இதுகுறித்துகாணாமல் போன மாணவிகளின் சகோதரர்கள் மற்றும் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகாரின்பேரில் போலீசார் தொடர்ந்து புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் பெண்கள் மாயமானதற்கு காதல் ஒரு முக்கிய காரணமாக இருப்பதாக பெற்றோர் மற்றும் போலீசார் தெரிவித்து வருகின்றனர்.காணாமல் போன இளம் பெண்கள் குறித்து உரிய தகவல் கிடைக்காமல் போலீசார் தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. மாணவிகள் மாயமானது குறித்து எந்தவித தகவலும் கிடைக்காததால் மாணவியரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மிகுந்த வேதனை மற்றும் மன உளைச்சலில் இருந்து வருவதாகவும் தெரிவித்தனர்.

 

Related Stories: