தண்டராம்பட்டு, ஏப்.8: தண்டராம்பட்டு அருகே இடி மின்னலுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. தண்டராம்பட்டு சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில தினங்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாடாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். புழுக்கம் காரணமாக இரவிலும் தூக்கம் வராமல் தவிக்கின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென இடி மின்னலுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.
வானாபுரம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் வைத்துள்ள மழை மானியில் 33.80 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.இந்த மழையின் காரணமாக விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல் தண்டராம்பட்டு அடுத்த சே.கூடலூர் ஊராட்சிக்குட்பட்ட காமாச்சாந்தல் கிராமத்தில் பெய்த ஆலங்கட்டி மழையால் 3 மின்கம்பம் சாய்ந்துள்ளது. இதனால் அங்கு மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.
