மறைந்த இந்திய கம்யூ. மூத்ததலைவர் நல்லகண்ணுவுக்கு புகழஞ்சலி

புதுக்கோட்டை, பிப்.27: மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முத்ததலைவர் நல்லக்கண்ணு மறைவிற்கு புதுக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் புகழஞ்சலி செலுத்தப்பட்டது. சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான நல்லக்கண்ணுவின் மறைவுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் புகழஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.புதுக்கோட்டை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கிய அமைதி ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று அண்ணா சிலை அருகில் நடைபெற்றது.

அங்கு நடைபெற்ற புகழஞ்சலி நிகழ்ச்சிக்கு சி.பி.ஐ மாவட்ட துணைச் செயலாளர் ரெங்கராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில் கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னதுரை, தி.மு.க வடக்கு மாவட்டச் செயலாளர் கே.கே.செல்லப்பாண்டியன், துணை மேயர் லியாகத்அலி, சி.பி.எம் மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர், மதிமுக மாவட்டச் செயலாளர் எஸ்.கே.கலியமூர்த்தி, காங்கிரஸ் சார்பில் இப்ராஹிம் பாபு, திக மாவட்டத் தலைவர் அறிவொளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Related Stories: