மயிலாடுதுறை, பிப்.27: மயிலாடுதுறை அறிஞர் அண்ணா பகுத்தறிவு மன்றத்தில் பாஜக மகளிர் மாநில செயற்குழு உறுப்பினர் மகாலட்சுமி தலைமையில் 35க்கும் மேற்பட்ட பெண்கள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மயிலாடுதுறை நகர செயலாளரும், நகர மன்ற தலைவர் செல்வராஜ் கழகத்தில் இணைந்த பெண்களுக்கு சாலை அணித்து வரவேற்றார்.
அப்போது திமுக ஆட்சியின் செய்த பெண்களுக்கான பல சாதனைகளை திட்டங்களை எடுத்து கூறினார். பின்னர் பகுத்தறிவு மன்றத்தில் உள்ள கலைஞரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது நகரத் துணைச் செயலாளர் சங்கர், நகரமன்றத் துணைத் தலைவர் குமார், நகர மன்ற உறுப்பினர்கள், நகர கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் ஏராளமான கலந்து கொண்டனர்.
