சீர்காழியில் காங்கிரஸ் கட்சி முகவர்கள் கூட்டம்

சீர்காழி, பிப். 26: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பானு சேகர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், மயிலாடுதுறை எம்பி வழக்கறிஞர் சுதா, மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

தொடர்ந்து பல்வேறு கட்சியில் இருந்து விலகிய நூற்றுக்கு மேற்பட்டோர், எம்பி சுதா தலைமையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தன. இதில் வட்டார தலைவர்கள் பாலகுரு, ஞானசம்பந்தம், பாலசுப்பிரமணியன், ராதாகிருஷ்ணன், ரவி, கார்த்திகேயன், நகரதலைவர் லட்சுமணன், நிர்வாகிகள் சரத்சந்திரன் ராஜேந்திரன் சிவராமன், விஆர்ஏ அன்பு, கிள்ளிவளவன், சரவணன், பிரியகுமார், குரு, புகழினியன், மொரார்ஜி , பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

Related Stories: