சென்னை: பிரதமர் மோடி 2 நாள் பயணமாக சென்னை வருகிறார். இதனால் வரும் 28 மற்றும் 1ம் ேததி மீனம்பாக்கம், கிண்டி பகுதிகள் ‘சிவப்பு மண்டலமாக’ காவல்துறை அறிவித்துள்ளது.பிரதமர் மோடி வரும் 28ம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சென்னை வருகிறார். இதனால் அவர் வரும் நாள் மற்றும் தங்கும் இடங்களில் சென்னை பெருநகர காவல்துறை ‘சிவப்பு மண்டலமாக’ அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:மிக முக்கிய பிரமுகர் சென்னைக்கு வரும் 28 மற்றும் 1ம் ஆகிய இரண்டு நாட்கள் வருகை தரவுள்ளதை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக மீனம்பாக்கம் கிண்டி ஆகிய பகுதிகள் மற்றும் வழித்தடங்கள் ‘சிவப்பு மண்டலமாக’ அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அரசு ஏற்பாடுகளை தவிர 28ம் தேதி மற்றும் 1ம் தேதி ஆகிய 2 நாட்களில் மேற்குறிப்பிட்ட இடங்களில் ட்ரோன் கேமராக்கள் மற்றும் ஆளில்லா வான்வழி கருவிகள் பறக்க விடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது. மேலும், 2023ம் ஆண்டு பாரதிய நாகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா பிரிவு 163 ன் கீழும், 2023 ஆம் ஆண்டு பாரதிய நாகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா பிாிவு 14ன் உட்பிரிவு(2) கீழும், ட்ரோன்கள், ரிமோட் மூலம் இயக்கப்படும் மைக்ரோ லைட் ஏர்கிராப்ட் பாரா கிளைடர்ஸ், பாரா மோட்டார்ஸ், ஹேன்ட் கிளைடர்ஸ், ஹாட் ஏர் பலூன்கள் போன்றவற்றை சென்னை பெருநகரில் பறக்க விட கடந்த 19ம் தேதி முதல் ஏப்ரல் 19ம் தேதி வரை தடை செய்யப்பட்ட அணை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
