சென்னை: சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் கடந்த 2013ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் சொத்து தகராறில் நரம்பியல் மருத்துவரான சுப்பையா கூலிப்படையினரால் கொல்லப்பட்டார். இதுதொடர்பான மேல்முறையீட்டு மனு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் முத்து இசக்கி, கோபால் சங்கர் நாராயணன் ஆகியோர், மருத்துவர் சுப்பையா கொலை விவகாரத்தில் அங்கிருந்த சிசிடிவியின் காட்சிகளின் அடிப்படையில் ஊர்ஜிதம் இல்லாமல் எங்களது தரப்பினர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். குறிப்பாக அவர்கள் உருவம் தான் அதில் இடம்பெற்றுள்ளதா என்றால் தற்போது வரையில் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.
ஏனெனில் அந்த காட்சிகள் அனைத்தும் தெளிவாக இல்லை. எனவே அதனை எப்படி ஆதாரகமாக ஏற்க முடியும். குறிப்பாக ஒரு சிசிடிவியின் காட்சிகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டது இதுவே முதல் முறையாகும் என்று தெரிவித்தனர். இதையடுத்து வழக்கு இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
