தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னை: சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:  நடைபெறவுள்ள 2026 சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படை வீரர்களை சிறப்பு காவலர்களாக ஈடுபடுத்திட, சென்னை மாவட்டத்தை சார்ந்த 65 வயதிற்குட்பட்ட உடல் ஆரோக்கியமுள்ள அனைத்து முன்னாள் இளநிலை படை அலுவலர்கள் மற்றும் இதர தரத்திலுள்ள முன்னாள் படை வீரர்களிடமிருந்து (ஜேசிஓ, ஆர்ஓ) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

விருப்பமுள்ள சென்னை மாவட்டத்தை சார்ந்த தகுதி வாய்ந்த முன்னாள் படைவீரர்கள் சென்னை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகம், சைதாப்பேட்டை, சென்னை-15 அலுவலகத்தை நேரில் அணுகி தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 044-22350780 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: