‘வெற்றிவேல்’ யாருக்கு?

திருவள்ளூர் மாவட்டத்தில் வடக்கு எல்லைப் பகுதியில் ஆந்திர மாநிலத்தை ஒட்டி உள்ள திருத்தணி சட்டமன்ற தொகுதி பொறுத்தவரை தற்போது எம்எல்ஏவாக திமுகவைச் சேர்ந்த சந்திரன் உள்ளார். இந்நிலையில், திமுக கூட்டணியில் திருத்தணி தொகுதியில் மீண்டும் திமுக போட்டியிட சிட்டிங் எம்எல்ஏ முயற்சி செய்து வருகிறார். அதேபோல், அதிமுக சார்பில் கடந்த போட்டியிட்டு தோல்வியடைந்த கோ.அரி மீண்டும் போட்டியிட ஆர்வம் காட்டி வருகிறார். திமுக கூட்டணியில் புதிதாக இணைந்த தேமுதிக திருத்தணி தொகுதி பெற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது.

அதேபோல், அதிமுக கூட்டணி பொறுத்தவரை பாஜ, தமாகா கட்சிகள் திருத்தணி தொகுதிக்கு முயற்சி செய்து வருவதாக தெரிகிறது. அதிமுகவில் உட்கட்சி பூசல், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ நரசிம்மன் சசிகலா கட்சி சார்பில் போட்டியிடுவது உறுதி என்று கூறப்படுவதால், அதிமுக ஓட்டு சிதறும் என்று எதிர்பார்க்கப்படுவதால், திருத்தணியில் வெற்றிவேல் யாருக்கு கிடைக்கும் என்பதை கணக்கிடுவது பெரும் சவால் தான்.

Related Stories: