நச்னு நாலு கேள்வி; பாஜ மூலம் கூட்டணிக்கு வந்த கட்சிகளுக்கு அவங்கதான் தொகுதி பங்கீடு செய்வாங்க… அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

1. என்னை சிறையில் கொல்ல எடப்பாடி அரசு சதி செய்தது? எவ்வளவோ முதுகில் குத்திட்டாங்க. இதுக்காக 9 ஆண்டுகள் காத்திருந்தேன் என்று புதுக்கட்சி தொடங்கிய சசிகலா கூறி உள்ளாரே? இதுகுறித்து என்ன கருத்து சொல்வது. 9 வருடம் கழித்து ஒரு நிகழ்வு நடந்ததாக சொல்வது நம்பக்கூடியதாக இருக்கிறதா?. எனவே இது தவறான கருத்து.

2. அமமுகக்கான தொகுதிகள் பிஜேபி மூலம் கேட்டு பெறப்படும் என்று டிடிவி சொல்கிறாரே? எடப்பாடியை முதல்வர் வேட்பாளரா ஏற்க டிடிவிக்கு தயக்கம் இருக்கா? கூட்டணியில் அமமுகவை அதிமுக புறக்கணிப்பதால் இந்த குழப்பமா?  அதிமுக, அமமுகவை புறக்கணிக்கவே இல்லை. அமமுக ஏற்கனவே என்.டி.ஏ கூட்டணியில் கடந்த தேர்தலில் பிஜேபியுடன் பயணித்தவர்கள்.

பிஜேபி மூலமாக பேசி கூட்டணிக்கு வந்ததால் சீட்டு சம்பந்தமான பிரச்னையை பிஜேபி மூலமே பேசுவார்கள். இதுதான் அவர்கள் கருத்தினுடைய வெளிபாடு. அமமுக, அதிமுகவுடன் நெருக்கமான கூட்டணியில் உள்ளார்கள். இந்த கூட்டணியானது அம்மாவின் தொண்டர்கள், பக்தர்கள் நாங்கள் என ஓரணியில் இருக்கிறோம் என்று டிடிவி.தினகரன் சொல்வதை செய்தியில் பார்த்து கொண்டிருக்கிறோம். எனவே எந்த கருத்து வேறுபாடும் கிடையாது.

3. எடப்பாடி மீது சசிகலா குற்றம்சாட்டிய நிலையில், எடப்பாடி தலைமையில் அதிமுக வெற்றியே பெறவில்லை என ஓபிஎஸ் சொல்லி உள்ளாரே? அனைவரையும் சேர்க்க சொன்னது தவறா? நான் தவறு செய்திருந்தால் அரசியலில் இருந்து விலகுறேன் என்று ஓபிஎஸ் தெரிவித்து உள்ளாரே? ஓபிஎஸ் சொல்வது எல்லாமே தவறானது தான். அவர் சட்டமன்றத்தில் அதிமுகவிற்கு மாற்று முகமாக இருக்கக்கூடிய முதலமைச்சரை உயர்த்தி பேசியது, அதிமுகவிற்கு ஒரு நெருக்கடியை உண்டாக்கும் பணியை ஒருங்கிணைப்பாளராக இருந்து அவர் செய்தார்.

கட்சிக்கு 2021ம் தேர்தல் முடிந்த பின்னரும், தேர்தல் நேரங்களிலும் எடப்பாடியார் இணை ஒருங்கிணைப்பாளர், ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளராக இருந்தார். ஒருங்கிணைப்பாளர் இருந்துவிட்டு, இன்றைய ஆட்சியையும், ஆட்சியாளர்களையும், முதலமைச்சரையும் வாழ்த்து பேசியது, அதிமுக தொண்டர்கள் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே, ஓபிஎஸ் செய்தது எல்லாமே தவறு தான்.

4. கூட்டணிக்கு எடப்பாடி தலைமை என்று சொல்லி வந்தாலும் தொகுதிகளை பாஜவிடம் கேட்டு பெறுவோம் என்று கூட்டணி கட்சி தலைவர்கள் சொல்கிறார்களே? கூட்டணிக்கு யார் தான் தலைமை? கூட்டணிக்கு தலைவர் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடியார் தான். அது எல்லோராலும் ஏற்றுகொள்ளப்பட்ட உண்மையான கருத்து.

ஆனால் சீட் சம்பந்தமான பிரச்னைகளை என்டிஏ கூட்டணியில் ஏற்கனவே அங்கம் வகித்தவர்கள், பிஜேபி தலைமையில் நாடாளுமன்ற தேர்தலில் பங்கு பெற்றவர்கள் பிஜேபியிடம் பேசுவார்கள். அவ்வாறு பேசினாலும் இறுதி முடிவை எங்களது பொதுச்செயலாளர் எடப்பாடியார் தான் எடுப்பார். எடப்பாடியார் முடிவுக்கு பின்புதான் வேட்பாளர் பட்டியலே அல்லது யார் யாருக்கு எந்த தொகுதிகள் என்பது அறிவிக்கப்படும். ஆகவே கூட்டணிக்கு தலைவர் எடப்பாடி பழனிசாமி தான்.

Related Stories: