சென்னை புறநகர் ரயில் சேவை பாதிப்புக்கு ஒன்றிய பாஜ அரசு பொறுப்பேற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்: ரயில்வே அமைச்சருக்கு பி.வில்சன் கடிதம்

சென்னை: ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு, திமுக எம்பி பி.வில்சன் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 5 நாட்களாக சென்னை புறநகர் ரயில் சேவை பாதிப்பால் பல ஆயிரக்கணக்கான ரயில் பயணிகள் நாள் தோறும் சிரமத்தை எதிர் கொண்டு வருகின்றனர். சென்னை கடற்கரை- தாம்பரம் மார்க்கத்தில் 204 மின்சார ரயில்களுக்கு பதிலாக 115 ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.

இதனால் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் எப்படி பயணிக்க முடியும்? சென்னை புறநகர் ரயில் சேவை ரத்து தவிர்க்க முடியாது எனில் மாற்று ஏற்பாடுகள் எங்கே? ஒன்றிய அரசின் நிர்வாக தோல்வியால் பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதற்கு ஒன்றிய அரசு பொறுப்பேற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: