கல்லூரி மாணவி பலாத்கார வழக்கில் கைதான 3 பேரிடம் நீதிபதி விசாரணை: பூட்டிய அறையில் நடந்தது

கோவை: கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியை சேர்ந்த கருப்பசாமி, அவரது சகோதரர் காளீஸ்வரன், மதுரையை சேர்ந்த உறவினர் தவசி ஆகிய 3 பேரை போலீசார் காலில் சுட்டுப்பிடித்து கைது செய்தனர். அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த வழக்கு, கோவை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, கடந்த 6ம் தேதி முதல் சாட்சிகள் விசாரணை துவங்கி நடைபெற்றது. நேற்று முன்தினம் சாட்சி விசாரணை முடிவடைந்தது. இதனைத்தொடர்ந்து, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காளீஸ்வரன், தவசி ஆகியோரையும், கோவை மத்திய சிறையில் உள்ள கருப்பசாமியையும் போலீசார் நேற்று அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களிடம் பூட்டிய அறையில் நீதிபதி சுந்தராஜன் சுமார் 1 1/2 மணி நேரம் விசாரணை நடத்தினார். இதனை தொடர்ந்து அரசு தரப்பு வாதம் நடைபெற்றது. இந்த வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதாக அரசு வழக்கறிஞர் ஜிஷா கூறினார்.

Related Stories: