தமிழ்நாடு மாநில தகவல் ஆணையராக அதுல்ய மிஸ்ரா, அபய்குமார் சிங் நியமனம்: அரசு உத்தரவு

சென்னை: தமிழ்நாடு மாநில தகவல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அதுல்ய மிஸ்ரா மற்றும் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி அபய்குமார் சிங் ஆகியோரை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையில், தமிழ்நாடு தகவல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அதுல்ய மிஸ்ரா மற்றும் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி அபய்குமார் சிங் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மாநில தகவல் ஆணையத்தின் பணிகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது. மேலும் புதிய மாநில தகவல் ஆணையர்கள் விரைவில் பதவியேற்க உள்ளனர். இவர்களின் நிர்வாக அனுபவம் மற்றும் சட்டம்-ஒழுங்கு துறைகளில் பெற்றுள்ள விரிவான பணிச்சூழல் அனுபவம், தகவல் ஆணையத்தின் செயல்திறனை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: