நெல்லை, பிப். 25: களக்காடு பகுதியை சேர்ந்த நம்பி மகன் சுப்பையா என்ற சுரேஷ் (39). இவர் மீது கஞ்சாவை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்ட வழக்கு களக்காடு காவல் நிலையத்தில் உள்ளன. இவரை வேறு ஒரு வழக்கில் களக்காடு போலீசார் கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர். இதனால் சுப்பையா என்ற சுரேஷை தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய வேண்டி நெல்லை மாவட்ட எஸ்பி பிரசண்ணகுமார், களக்காடு இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் நெல்லை கலெக்டர் சுகுமாரிடம் பரிந்துரைத்தனர். இதனையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் போலீசார் பாளைமத்திய சிறையில் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சுப்பையா என்ற சுரேஷை கைது செய்தனர்.
