விகேபுரம்,பிப்.25: விகேபுரம் அசிசி பள்ளியில் சர்வதேச சமூக நல்லிணக்க அறக்கட்டளை சார்பில் மாணவர்களின் தன்னம்பிக்கை, தலைமைத்திறன் மற்றும் பெண்களின் சுயமரியாதையை வலியுறுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பள்ளி முதல்வர் ஜோசப் தலைமை வகித்தார். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக திருவள்ளுவர் கல்லூரி முதுநிலை கணிதவியல் துறையின் உதவிப்பேராசிரியர் இசக்கியம்மாள், கலந்து கொண்டு பெண்களின் சுயமரியாதை, கல்வியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து இளம் எழுத்தாளர் தேன்மொழி, ‘தன்னம்பிக்கை’ என்ற தலைப்பில் மாணவர்கள் தங்களது திறமைகளை நம்பி தைரியமாக முன்னேற வேண்டும் என்றும், தோல்வியை அஞ்சாமல் முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம் என்றும் உரையாற்றினார். நிஷா நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஷாஜி செய்திருந்தார்.
விகேபுரம் பள்ளியில் தலைமை திறன் விழிப்புணர்வு முகாம்
- விழிப்புணர்வு
- விகேபுரம் பள்ளி
- Vikepuram
- விகேபுரம் அசிசி பள்ளி
- சர்வதேச சமூக நல்லிணக்க அறக்கட்டளை
- ஜோசப்
- திருவள்ளுவர் கல்லூரி முதுகலை...
