6 மாநிலங்களில் எஸ்ஐஆர் பணி நிறைவு 1.70 கோடி வாக்காளர்கள் நீக்கம்: குஜராத்தில் அதிகபட்சம்

புதுடெல்லி: நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலை சரி செய்யும் வகையில் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. பீகார் தேர்தலுக்கு பிறகு நடந்த இந்த திருத்தப்பணியில் 6 மாநிலங்களில் இதுவரை இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் குஜராத்தில் அதிகபட்சமாக 68 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். எஸ்ஐஆர் பணிக்கு முன்பு குஜராத்தில் 5,08,43,436 வாக்காளர்கள் இருந்தனர்.

எஸ்ஐஆர் பணிக்கு பிறகு 4,40,30,725 ஆகக் குறைந்துள்ளது இது 13.40% குறைவு ஆகும். 34,25,078 வாக்காளர் நீக்கங்களுடன் மத்தியபிரதேசம் 2வது இடத்தை பிடித்துள்ளது. அங்கு வாக்காளர் எண்ணிக்கை 5,74,06,143 இலிருந்து 5,39,81,065 (-5.97%) ஆகக் குறைந்துள்ளது. ராஜஸ்தானில் வாக்காளர்களின் எண்ணிக்கை 5,46,56,215 இலிருந்து 5,15,19,929 (-31,36,286) ஆகக் குறைந்துள்ளது. சட்டீஸ்கரில் 2,12,30,737 இலிருந்து 1,87,30,914 (-24,99,823) ஆகக் குறைந்துள்ளது.

கேரளாவில் 2,78,50,855 இலிருந்து 2,69,53,644 (-8,97,211) ஆகவும், கோவாவில் 11,85,034 இலிருந்து 10,57,566 (-1,27,468) ஆகவும் குறைந்துள்ளது. யூனியன் பிரதேசங்களில், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை 3,10,404 இலிருந்து 2,58,040 ஆக (-52,364) குறைந்துள்ளது, புதுச்சேரியில் 10,21,578 இலிருந்து 9,44,211 ஆக (-77,367) குறைந்துள்ளது,

லட்சத்தீவில் 57,813 இலிருந்து 57,607 ஆக (-206) குறைந்துள்ளது. 6 மாநிலங்களில் மொத்தம் 1.70 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். நீக்கத்திற்கான காரணங்களில் இறப்பு, நிரந்தர இடமாற்றம், பல பதிவுகள் அல்லது பிற தகுதி சிக்கல்கள் ஆகியவை அடங்கும். என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

* தமிழ்நாட்டில் 1 கோடி பேர் நீக்கமா?
தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணிக்கு பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்பட உள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலில் கிட்டத்தட்ட 1 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டு இருந்தனர். அதே 1 கோடி வாக்காளர்கள் இறுதிப்பட்டியலிலும் நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதே போல் மேற்குவங்கத்தில் இறுதிப்பட்டியல் பிப்.28ஆம் தேதியும், உபியில் 15.44 கோடி வாக்காளர்களில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டு வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. அங்கு ஏப்.10ஆம் தேதி இறுதிப்பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

Related Stories: