கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் மறியல்

விருதுநகர், பிப்.19: விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வைரவன், மாவட்டத் தலைவர் எஸ்தர் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பென்ஷன் ஊதியத்தை உயர்த்த வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தேர்தல் வாக்குறுதியில் அளித்த அறிவிப்புகளை தமிழக அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர். அதைத் தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 512 பெண்கள் உட்பட 520 பேரை போலீசார் கைது செய்து, குல்லூர் சந்தை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

 

Related Stories: