மதுரை: மதுரை மண்டல அளவில் நடைபெற்ற அனைத்து உலக வள்ளலார் போட்டியில் வள்ளலார் பாடல்களை ஒப்புவித்தல் போட்டில் புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி பஷிலா முதலிடம் பெற்றார். இதேபோல் இசை போட்டியில் ஸ்ரீராம் நல்லமணி யாதவா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜாய் ரீனா முதலிடம் பெற்றனர்.
இவர்களுக்கு சென்னையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் நினைவு பரிசும் சான்றிதழ்களை வழங்கினார். இதனையடுத்து வெற்றி பெற்ற மாணவிகளை மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தயாளன் வெகுவாக பாராட்டினார்.
