இளைஞருக்கு அரிவாள் வெட்டு

தேவதானப்பட்டி, பிப். 19: தேவதானப்பட்டி அருகே எருமலைநாயக்கன்பட்டி சடையாண்டிகோவில் தெருவைச் சேர்ந்த தங்கப்பாண்டி(22) என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த விஷ்ணு என்பவரது தரப்பினருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் எருமலைநாயக்கன்பட்டியில் உறவினர் வீட்டு விஷேசத்திற்கு சீர் கொண்டு செல்லும் போது தங்கப்பாண்டியிடம் விஷ்ணு தரப்பினர் தகராறு செய்து அரிவாளால் தலையில் பலமாக வெட்டியுள்ளனர். இது குறித்து புகாரின் பேரில் 12 பேர் மீது ஜெயமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Related Stories: