பல்லடம், பிப். 19: பல்லடம் அரசு கல்லூரியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் கல்லூரி மாணவர்களுக்கு செயல்முறை விளக்கம் அளித்த நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் மணிமேகலை தலைமை வகித்தார். துணை முதல்வர் ஜெயச்சந்திரன் வரவேற்றார். இதில் வட்டாட்சியர் ராஜேஷ், நகராட்சி ஆணையாளர் அருள், தீயணைப்பு துறை நிலைய அலுவலர் முத்துக்குமாரசுவாமி ஆகியோர் கலந்து கொண்டனர். தேசிய பேரிடர் மீட்புக் குழு ஆய்வாளர் ரமணா விளக்கம் அளித்தார்.
