ரூ.5.67 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்

ஈரோடு, பிப். 19: தாளவாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வார்ந்தோறும் புதன்கிழமை மஞ்சள் ஏலம் நடைபெற்று வருகிறது. அதன்படி, நேற்று நடைபெற்ற ஏலத்துக்கு 46.27 குவிண்டால் எடையிலான 77 மூட்டை அன்பாலீஷ்டு மஞ்சள் விற்பனைக்கு வந்தன.

இது, குறைந்தபட்ச விலையாக குவிண்டால் ரூ. 11,100க்கும், அதிகபட்ச விலையாக குவிண்டால் ரூ.3,616க்கும், சராசரி விலையாக குவிண்டால் ரூ.12,358க்கும் விற்பனையானது. இந்த ஏலத்தில் மொத்தம் ரூ.5 லட்சத்து 67 ஆயிரத்து 39க்கு மஞ்சள் விற்பனையானதாக விற்பனைக்கூட மேற்பார்வையாளர் தெரிவித்தார்.

 

Related Stories: