மொபட் மீது கார் மோதி முதியவர் பலி

பெருந்துறை, பிப். 19: பெருந்துறை அருகே மொபட் மீது கார் மோதி முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பெருந்துறை அருகே திருவாச்சி, சோளிபாளையத்தை சேர்ந்தவர் உச்சையன் (78), விவசாய கூலி தொழிலாளி.இவர், நேற்று முன்தினம் காலையில் பெருந்துறை அருகே வாவிக்கடை பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் தனது மொபட்டில் சென்றார்.

அப்போது, அந்த வழியாகவந்த கார் உச்சையன் ஓட்டி சென்ற மொபட் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த உச்சையனை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே உச்சையன் உயிரிழந்தார். இதுகுறித்து, பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Related Stories: