முப்பெரும் நற்பணி மன்ற பேரவையினர் அன்னதானம்

பல்லடம், பிப்.19:பல்லடம் அங்காளம்மன் கோயில் குண்டம் திருவிழாவையொட்டி பல்லடம் முப்பெரும் நற்பணி மன்றப் பேரவை சார்பில் 46ம் ஆண்டு விழாவையொட்டி 4600 பேருக்கு அன்னதானம் வழங்கும் விழா நடந்தது. பேரவை செயலாளர் கேசவன், பல்லடம் நகர அதிமுக செயலாளர் பானு பழனிசாமி ஆகியோர் அன்னதானத்தை தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் ராமமூர்த்தி, மன்றப்பேரவை தலைவர் ஆனந்தா செல்வராஜ், அமைப்பாளர் குணாபரமானந்தன், துணை செயலாளர் பரமசிவம், நிர்வாகிகள் ரங்கசாமி, சண்முகம், திலீப்குமார், சேகர், அசோக், பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

Related Stories: