திருமங்கலம், பிப். 19: திருமங்கலம் அருகே கஞ்சா கடத்திய முதியவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். திருமங்கலம் அருகே கூடக்கோவில் எஸ்ஐ பால்ராஜ் தலைமையில், போலீசார் நேற்று முன்தினம் இரவு மதுரை – தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் ரோந்து சென்றனர்.
எலியார்பத்தியில் உள்ள நர்சிங் கல்லூரி அருகே சென்ற போது போலீசாரை பார்த்த 60 வயது முதியவர் ஒருவர் கையில் வைத்திருந்த கட்டைப்பையை வைத்து விட்டு அருகேயுள்ள முட்புதருக்கு ஓடினார். போலீசாரின் சோதனையில் அந்த பையில் 2 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது. இதையடுத்து தப்பியோடிய அடையாளம் தெரியாத முதியவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
