பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் தொடர் போராட்டம்

ஊட்டி, பிப்.19: அரசுத்துறை காலி பணியிடங்களில் பணிமூப்பு அடிப்படையில் சத்துணவு ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். 60 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஓய்வுபெறும் சத்துணவு ஊழியர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் கிராம உதவியாளர்களுக்கு வழங்குவதை போல ரூ.6750ஐ அகவிலை படியுடன் வழங்க வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு திட்ட ஊழியர்கள் மூலமாக வழங்க வேண்டும்.

அரசாணையின்படி 10 ஆண்டுகள் பணி முடித்த சத்துணவு அமைப்பாளருக்கு பதிவுரு எழுத்தராக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கடந்த 3ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 13வது நாளான நேற்று ஊட்டி ஏடிசி பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுஜாதா தலைமை வகித்தார். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி பலரும் பேசினர். தொடர்ந்து ேகாஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமான சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

 

Related Stories: