ஈரோடு, பிப். 11: தேசிய அளவிலான கேரம் போட்டிக்கு ஈரோடு மாவட்ட அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் தேர்வு பெற்றுள்ளார். சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டரங்கில் தேசிய அளவிலான சிவில் சர்வீசஸ் கேரம் போட்டிக்கான தமிழ்நாடு வீரர்கள் தேர்வு போட்டி நடைபெற்றது. இதில், ஈரோடு மாவட்டம் சித்தோடு அரசு மேல்நிலைப்பள்ளி கலை ஆசிரியர் சிவசங்கர், மூத்தோர் பிரிவில் பங்கேற்று தனது திறமைகளை வெளிக்காட்டி, மாநில அளவில் முதலிடம் பெற்றார். மேலும், தேசிய அளவிலான போட்டியில் தமிழ்நாடு வீரராக பங்கேற்கவும் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து சிவசங்கரை ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மான்விழி, பாராட்டி வாழ்த்தினார்.
