பவானி அருகே தாளகுளத்தில் நீர் வழிப்பாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பவானி, பிப். 13: பவானி அருகே வரதநல்லூர் ஊராட்சி, தாளகுளம் கிராமத்தில் ஓடை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. அதன்பேரில், சம்பவ இடத்தில் வருவாய்த்துறையினர் களஆய்வு செய்தபோது, கோமதி, ரவீந்திரன் ஆகியோரின் விவசாய நிலம் வழியாக செல்லும் நீர்வழிப்பாதை ஆக்கிரமிக்கப்பட்டு பாக்கு மரங்கள் சாகுபடி செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, பவானி தாசில்தார் சரவணன் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார்.

அதன்பேரில், மண்டல துணை தாசில்தார் பழனிவேலு தலைமையில் நில வருவாய் ஆய்வாளர் ஸ்ரீதர், கிராம நிர்வாக அலுவலர்கள் ராமசாமி, முத்துசாமி, பத்மாவதி, நித்யா உள்ளிட்டோர் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்,  வரதநல்லூர் ஊராட்சி செயலாளர் அம்பிகா வடிவேல் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர். சம்பவ இடத்தில் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க பவானி இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 

Related Stories: