சோகத்தூர் சோமேஷ்வரர் கோயில் ராஜகோபுரம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா'

தர்மபுரி, பிப்.5: தர்மபுரி மாவட்டம் கடகத்தூரில் சுமார் 850ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த, சோழ மன்னரால் கட்டப்பட்ட சோமேஸ்வரர் கோயிலில் நேற்று ராஜகோபுரத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.திருவாரூர் சிவ நடராஜன் சுவாமிகள், திருப்பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் இப்பகுதியை சேர்ந்த பக்தர்கள், 108 கற்களை வீட்டில் இருந்து கோயிலுக்கு கொண்டு வந்தனர். பெண்கள் அனைவரும் பூஜை அறையில் வைக்கப்பட்டிருந்த புனித நீரை கொண்டு வந்து, ராஜகோபுரத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் ஊற்றினர்.

தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், ஊர் கவுண்டர்கள், ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் நற்சுவை சுகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: