வெயில் தாக்கம் அதிகரிப்பு: பொள்ளாச்சி இளநீர் விலை உயர்வு

பொள்ளாச்சி: வெயிலின் தாக்கம் அதிகரிப்பு காரணமாக பொள்ளாச்சி இளநீர் விலை உயர்ந்துள்ளது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதன்காரணமாக, பொள்ளாச்சி இளநீருக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் நேரடியாக வந்து இளநீரை வாங்கி செல்கின்றனர். தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திண்டுக்கல், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் அதிகளவு இளநீர் அனுப்பப்படுகிறது.

கடந்தாண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைக்கு பிறகு, தென்னைகளில் இளநீர் உற்பத்தி வழக்கத்தைவிட அதிகமானது. இதனால், இளநீர் குறைந்த விலைக்கே விற்பனை செய்யபட்டது. சில மாதமாக பண்ணை நேரடி விலையாக ரூ.23க்கே வியாபாரிகள் வாங்கி சென்றனர். கடந்த ஜனவரி மாதம் ஒரு இளநீர் அதிபட்சமாக ரூ.20 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்து இருப்பதால், பண்ணை விலையில் மாற்றம் ஏற்பட்டு இளநீர் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால், இந்த மாதம் துவக்கத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டம் மற்றும் வட மாநிலங்களுக்கு என, பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்றுவட்டார பகுதியிலிருந்து தினமும் 3 லட்சம் வரை இளநீர் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி பண்ணை விலை ஒரு இளநீர் தலா ரூ.33 வரை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Related Stories: