ஜாடிக்கு ஏத்த மூடி மோடி – எடப்பாடி; அரசியல்ல ‘என்டர்டெயின்மென்ட்’பண்ண ஒரு கூட்டம் வந்திருக்கு: தேர்தலால் தமிழ்நாட்டில் சவாரி போறாங்க…

தஞ்சாவூர் செங்கிப்பட்டி அடுத்த திருமலை சமுத்திரம் பகுதியில் தஞ்சாவூர் மாவட்ட இளைஞரணி சந்திப்பு நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.

இளைஞர் அணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:
கடந்த இரண்டு மாசத்துல மட்டும் 9000 ரூபாய் நம்முடைய தலைவர் தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுத்திருக்காங்க. இப்போ ஒட்டுமொத்த சங்கிக் கூட்டமும், அடிமை கூட்டமும் கலங்கிக்கிட்டு இருக்கு. ஜாடிக்கேத்த மூடி என்று சொல்வார்கள், ஆனால் மோடிக்கு ஏற்ற அடிமையாக இன்று எடப்பாடி பழனிசாமி ஒரு சிறந்த அடிமையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். சட்டமன்றத் தேர்தல் வருகிறது, அதனால் தமிழ்நாட்டுக்கு மீண்டும் சவாரி ஓட்ட ஆரம்பிப்பார்கள். மோடி மீண்டும் அடிக்கடி வருவார். அமித்ஷா தொடர்ந்து வருவார். அவர்கள் எல்லாம் வருவார்களே தவிர தமிழ்நாட்டிற்கு தேவையான நிதி மட்டும் நிச்சயம் வராது. மோடி அவர்களே, அமித்ஷா அவர்களே, உங்களுடைய பருப்பு உத்தரப்பிரதேசத்தில், பீகாரில், வடநாட்டில் வேகலாம். ஆனால் தமிழ்நாட்டில் ஒருபோதும் உங்களுடைய பருப்பு வேகவே வேகாது.

ஒரே சத்தம், ஒரு கொள்கை, லட்சியம், ஒரு கோட்பாடு எதுவுமே இல்லாமல், அப்படின்னா என்னன்னே தெரியாமல் ஒரு கூட்டம் சுற்றிக்கொண்டிருக்கிறது. அரசியலை ஏதோ ‘என்டர்டெயின்மென்ட்’ என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள். அரசியல் என்றால் மக்கள் பணி, என்டர்டெயின்மென்ட் கிடையாது. இந்த சட்டமன்ற தேர்தல் சமூக நீதிக்கும், சமூக அநீதிக்கும் இடையே நடக்கப்போகிற தேர்தல். தமிழ் மொழிக்கும் இந்தி மொழி திணிப்புக்கும் இடையே நடக்கப்போகின்ற ஒரு தேர்தல். தமிழ்நாடு என்றைக்கும் தலைகுனியாது என்று டெல்லிக்கு நாம் உணர்த்த வேண்டிய தேர்தல். இந்த தேர்தலில் திமுக ஜெயிப்பது என்பது தமிழ்நாட்டை தற்காத்து கொள்வதற்கு சமம். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, பட்டுக்கோட்டையில் நேற்று நடந்த திருமண விழாவில் பங்கேற்று துணை முதல்வர் உயதநிதி ஸ்டாலின் பேசுகையில், ‘‘ஒன்றிய நிதித்துறை அமைச்சர், பட்ஜெட்டை வாசித்து முடிப்பதற்கு முன்பாகவே இங்கு இருக்கக்கூடிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இது ஒரு சிறந்த பட்ஜெட்ன்னு வாழ்த்துரை கொடுக்கிறார். அதனால் தான் நான் அடிக்கடி சொல்றேன், எடப்பாடி பழனிசாமி தான் இன்றைக்கு இந்தியாவிலேயே சிறந்த பாஜவின் ‘முரட்டு அடிமை’. இனிமேல் 10 தோல்வி பழனிசாமியும், மொத்த தோல்வி மோடியும் என்ன தான் பாடுபட்டாலும் தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையை பெற முடியாது. மீண்டும் அமையப்போவது திராவிட மாடல் ஆட்சி தான். நமது தலைவர் தான் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்க போகிறார். இதற்கு மக்கள் துணை நிற்க வேண்டும்’‘ என்றார்.

டயர் நக்கி, தூக்குல தொங்குவேன்னு சொன்னது யார்?
‘‘இன்று பாஜ, அதிமுகவோடு கூட்டணி வைத்திருக்கிற கட்சிகள், கூட்டணி வைத்திருக்க கூடிய தலைவர்கள், நீங்களே யோசித்து பாருங்கள். ஒரு காலத்தில் ஒருவரை எப்படி எல்லாம் புகழ்ந்து பேசினார்கள். இரண்டு மாசத்திற்கு முன்பு, மூன்று மாசத்திற்கு முன்பு அவர்கள் என்ன சொன்னார்கள் என்று மட்டும் சொல்கிறேன். யார் சொன்னார்கள் என்று நீங்களே கண்டுபிடித்து கொள்ளுங்கள். இப்போது கூட்டணியில் இருக்கக்கூடிய ஒருவர் சொன்னார். எடப்பாடி பழனிசாமியோடு கூட்டணி வைப்பதற்கு தூக்கில் தொங்கி விடலாம் என்று சொன்னது யார்? இன்னொருவர் இருக்கிறார், அவர் சொன்னார், எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு எந்த அருகதையும் கிடையாது, ஒரு கவுன்சிலர் ஆவதற்கு கூட தகுதி கிடையாது, அவர் ஒரு டயர் நக்கி என்று சொன்னது யார்? இதையெல்லாம் விட இன்னொரு பக்கம் யாருக்கும் எந்தப் பயனும் இல்லாமல் ஒரு கோஷ்டி சுற்றிக்கொண்டிருக்கிறது.

Related Stories: