முதுநிலை க்யூட் நுழைவுத்தேர்வு மார்ச் 6ம் தேதி தொடக்கம்

சென்னை: முதுநிலை க்யூட் நுழைவுத்தேர்வு மார்ச் 6 முதல் 27ம் தேதி வரை நடைபெற உள்ளதாக என்டிஏ தெரிவித்துள்ளது. அடுத்த கல்வியாண்டில்(2026-27) முதுநிலை படிப்புகளுக்கான க்யூட் தேர்வு கணினி வழியில் மார்ச் மாதம் நடத்தப்பட உள்ளதாக என்டிஏ அறிவித்தது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த டிசம்பர் 14ம் தேதி தொடங்கி ஜனவரி 25ம் தேதியுடன் நிறைவு பெற்றது. மொத்தம் 4 லட்சத்து 11,366 பேர் இந்த தேர்வெழுத விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில் தேர்வுக்கால அட்டவணையை என்டிஏ தற்போது வெளியிட்டுள்ளது. க்யூட் தேர்வு மார்ச் 6 முதல் 27ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான காலஅட்டவணை https://exams.nta.ac.in/CUET-PG/ இணையதளத்தில் உள்ளது.  இதுகுறித்த கூடுதல் விவரங்களை /www.nta.ac.in/ என்ற வலைத்தளத்தில் அறியலாம். ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 011-40759000 என்ற தொலைபேசி எண் அல்லது helpdesk-cuetpg@nta.ac.in என்ற மின்னஞ்சல் வழியே தொடர்பு கொள்ளலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: