தஞ்சை பெரியகோயிலில் தாலியுடன் சுற்றிய இந்துமக்கள் கட்சியினர்: தலைதெறிக்க ஓடிய காதல் ஜோடிகள்

தஞ்சாவூர்: காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாலை, தாலியுடன் தஞ்சை பெரியகோயிலில் காத்திருந்த இந்து மக்கள் கட்சியினரை கண்டதும் காதல் ஜோடிகள் தலைதெறிக்க ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
உலகம் முழுவதும் நேற்று காதலர்தினம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் இந்து மக்கள் கட்சியினர், காதலர் தினத்தன்று தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு வரும் காதலர்களுக்கு தாலி கயிறு கட்ட வைப்போம் என்று அறிவித்திருந்தனர். அதன்படி, மாநில மாநில துணைத் தலைவர் கார்த்திக் தலைமையில் நிர்வாகிகள் தஞ்சாவூர் பெரியகோயில் அருகே மஞ்சள் கயிறுகளுடன் நின்றிருந்தனர்.

முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தஞ்சாவூர் கிழக்கு போலீசார் பெரியகோயிலுக்கு வரும் காதல் ஜோடிகளை நுழைவாயில் முன்பே தடுத்து நிறுத்தி வெளியே அனுப்பி வைத்தனர். இதில், ஒரு சில காதல் ஜோடிகள், இந்து மக்கள் கட்சியினர் மாலை, தாலியுடன் பெரிய கோயில் நுழைவாயில் முன்பு நிற்பதை கண்டு தலைதெறிக்க ஓடினர். பெரிய கோயிலுக்கு டூ வீலர்களில் வந்த சில காதல் ஜோடிகள், உடனடியாக யூடர்ன் போட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆனார்கள். தொடர்ந்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories: