கவுரவ விரிவுரையாளர்கள் கோரிக்கை முதல்வர் விரைவில் தீர்வு காண்பார்: அமைச்சர் கோவி.செழியன் உறுதி

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் நேற்று அளித்த பேட்டி: தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.56 கோடி மதிப்பிலான கட்டிடங்களுக்கு இன்றைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இது தஞ்சாவூர் மக்களுக்கு மட்டுமல்ல, ராஜராஜ சோழனுக்கு பெருமையை நிலைநிறுத்தும் வகையில், வாழும் ராஜராஜ சோழனுக்கு (மு.க.ஸ்டாலின்) தஞ்சாவூர் மாவட்ட மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

அரசு கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கவுரவ விரிவுரையாளர்களுக்கு கடந்த காலங்களில் வழங்கப்பட்ட சம்பளம் ரூ.15,000 மட்டுமே. தற்போதைய அரசு இரண்டு முறை தலா ரூ.5,000 என உயர்த்தி வழங்கியுள்ளது. இது போதிய ஊதியம் என நான் கூற விரும்பவில்லை.

ஆனால், அவர்களுடைய கோரிக்கையை முதல்வரிடத்தில் எடுத்துச் சொல்லி உள்ளோம். முதல்வர் விரைவில் தீர்த்து வைப்பார். தற்போது வரை 31 மாதங்களுக்கு பெண்களுக்கு உரிமைத் தொகையை முதல்வர் தந்துள்ளார். இதன் மூலம் தமிழ்நாடு என்பது மகளிர் நாடு என்ற பெருமையை பெற்றிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினர்.

Related Stories: