சத்யபாமாவுக்கும் எதிர்ப்பு

திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட தவெக சார்பில் சத்யபாமாவுக்கும், தெற்கு தொகுதியில் போட்டியிட மாநகர் மாவட்ட செயலாளர் பாலமுருகனுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. சத்யபாமாவுக்கு வடக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது பாலமுருகனின் ஆதரவாளர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வேட்பாளர் அறிவிப்பிற்கு முன்பே பாலமுருகன் வடக்கு சட்டமன்ற தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார்.

ஆனால் வடக்கு தொகுதி அவருக்கு கிடைக்காததால் அவருடைய ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  சத்யபாமா வேட்புமனு தாக்கல் செய்ய வரும்போதுகூட பாலமுருகன் ஆதரவாளர்கள் வரவில்லை. சத்யபாமா தனது ஊரான கோபியில் இருந்து தவெக தொண்டர்களை அழைத்து வந்து வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

தவெகவில் இருக்கும் தொண்டர்கள் தலைமைக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டுமென மேற்கு மண்டல பொறுப்பாளர் செங்கோட்டையன் கடிந்து கொண்டதாக நிர்வாகிகள் கூறுகின்றனர். இவர் அதிமுகவில் இருந்த போது தலைமைக்கு கட்டுப்பட்டாரா? தனக்கு வந்தா ரத்தம், மற்றவங்களுக்கு வந்த தக்காளி சட்னியா? நேற்று கட்சிக்கு வந்தவர் நமக்கு அறிவுரை கூறுவதா என விஜய் ரசிகர்கள் கொதிப்படைந்துள்ளனர்.

Related Stories: