மதுரை: மக்கள் விடுதலை கட்சியின் தலைவரும், எம்எல்ஏவுமான சு.க.முருகவேல் ராஜன், மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக மீண்டும் ஆட்சி அமைத்தவுடன் கூட்டணியில் உள்ள மக்கள் விடுதலை கட்சிக்கு பொறுப்பு மிக்க அதிகாரமிக்க அரசு பொறுப்பு (வாரியம்) வழங்கப்படும் என முதல்வர் வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.
எனவே, சட்டமன்ற தேர்தலில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், எங்கள் கட்சி ஒன்றியத்தை ஆண்டு கொண்டிருக்கிற பாசிச, மதவாத, பாஜ மற்றும் ஆர்.எஸ்.எஸ். எந்தவிதத்திலும் தமிழகத்திற்குள் காலூன்றி விட கூடாது என்ற அடிப்படையில் உறுதியாக உள்ளது.
அதனால், மோடி – எடப்பாடி தலைமையில் அமைந்துள்ள தமிழ்நாட்டின் நலன்களுக்கு எதிரான தேசிய ஜனநாயக கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என, நாங்கள் உறுதியாக உள்ளதால், வரும் தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு முழு ஆதரவை தொடர்ந்து வழங்க உள்ளோம்.
இவ்வாறு கூறினார்.
