அதிர்ச்சியோடு விடிந்த காலை: சென்னையில் வணிக சிலிண்டர் விலை உயர்வு

 

சென்னை: வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தின. மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி மறுத்துள்ளது. இதனால் வணிக கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் எரிவாயு விநியோகம் தடைப்பட்டுள்ளது.

மேற்கு ஆசிய போர் காரணமாக ஏற்கனவே வணிக சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா – ஈரான் போர் காரணமாக எரிவாயு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் வணிக சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. ஏப்ரல் ஒன்றாம் தேதியான இன்று வணிக சிலிண்டர் விலை ரூ.203 உயர்ந்தது. சென்னையில் ரூ. 2,043க்கு விற்பனையான 19 கிலோ சிலிண்டர் ரூ.2,246 ஆக அதிகரித்துள்ளது. வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை கொல்கத்தாவில் ரூ.218, டெல்லியில் ரூ.195 உயர்ந்தது.

அமெரிக்கா -ஈரான் போர் தொடங்கிய பிறகு 2வது முறையாக வணிக சிலிண்டர் விலையை உயர்த்தியுள்ளன. வணிக சிலிண்டர் விலை அதிகரித்த போதும், வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்த்தப்படவில்லை.

Related Stories: