ஐபிஎஸ் அந்தஸ்து இல்லாததால் தேர்தலுக்காக மாற்றப்பட்ட 8 எஸ்பி.க்களுக்கு மீண்டும் பணி: உள்துறை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவு

சென்னை: ஐபிஎஸ் அந்தஸ்து இல்லாததால் மாற்றப்பட்டு கட்டாய காத்திருப்போர் பட்டியலில் இருந்த 8 எஸ்பிக்களை மீண்டும் பணி நியமனம் செய்து உள்துறை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் காரணமாக இந்திய தேர்தல் ஆணைய செயலாளர் கடந்த வாரம் விருதுநகர் மாவட்ட எஸ்பியாக பணியாற்றி வந்த கண்ணன், நாகப்பட்டினம் மாவட்ட எஸ்பியாக பணியாற்றி வந்த பால்லா கிருஷ்ணன், கரூர் மாவட்ட எஸ்பியாக பணியாற்றி வந்த ஜோஷ் தங்கையா , ஈரோடு மாவட்ட எஸ்பியாக பணியாற்றி வந்த சுஜாதா ஆகிய 4 பேர் அதிரடியாக பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.

அவர்களைத் தொடர்ந்து மேலும் 4 எஸ்பிக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் உள்துறை செயலாளர் தீரஜ்குமார் கட்டாய காத்திருப்போர் பட்டியலில் இருந்த 8 எஸ்பிக்களுக்கு பணிகள் வழங்கி உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவில், காத்திருப்போர் பட்டியலில் இருந்த கண்ணன் சென்னை பெருநகர காவல்துறை காவலர் நலன் மற்றும் எஸ்டேட் பிரிவு துணை கமிஷனராகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்து பல்லா கிருஷ்ணன் சென்னை பெருநகர காவல்துறை தலைமையிட துணை கமிஷனராகவும், காத்திருப்போர் பட்டியலில் ஈருந்து ஜோஷ் தங்கையா சென்னை பெருநகர காவல்துறை பாதுகாப்பு பிரிவு துணை கமிஷனராகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த சுஜாதா சென்னை பயங்கரவாத தடுப்பு பிரிவு எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல், கட்டாய காத்திருப்போர் பட்டியலில் இருந்த சண்முகம் சென்னை க்யூ பிரிவு எஸ்பியாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ராஜாராம் சென்னை தெற்கு மண்டல லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பியாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த மாதவன் மெட்ரோ மண்டல, சிபிசிஐடி எஸ்பியாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த அனிதா சென்னை காவல்துறை நவீனமயமாக்கல் உதவி ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: