தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து பிரேமலதா இன்று முதல் பிரசாரம்

சென்னை: தேமுதிக தலைமை வெளியிட்ட அறிக்கை: திருத்தணி வேட்பாளர் கிருஷ்ணமூர்த்திக்கு ஆதரவாக இன்றும், பல்லாவரம் வேட்பாளர் அனகை முருகேசனுக்கு ஆதரவாக நாளையும், குடியாத்தம் தனி தொகுதி வேட்பாளர் பிரதாப்க்கு ஆதரவாக 3ம் தேதியும், போளூர் வேட்பாளர் சரவணனுக்கு ஆதரவாக 4ம் தேதியும், மயிலம் வேட்பாளர் வெங்கடேசனை ஆதரித்து 5ம் தேதி மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை பிரசாரம் செய்கிறார்.

மேலும் தர்மபுரி வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து 10ம் தேதியும், ஓமலூர் வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து வரும் 11ம் தேதியும், சேலம் மேற்கு தொகுதி வேட்பாளர் அழகாபுரம் ஆர்.மோகன்ராஜை ஆதரித்து 12ம் தேதி மாலை 4 மணி முதல் இரவு 10மணி வரையும் பிரசாரம் மேற்கொள்கிறார்.

சென்னை சட்டமன்ற தொகுதியில் வரும் 15ம் தேதியும், விருதுநகர் தொகுதி வேட்பாளர் விஜயபிரபாகரை ஆதரித்து வரும் 16 முதல் 17ம் தேதி வரையும் பிரசாரம் செய்கிறார். மேலும் தான் போட்டியிடும் தொகுதியான விருத்தாசலத்தில் 6ம் தேதி முதல் 9ம் தேதி வரையும், தொடர்ந்து 13, 14ம் தேதியும், 18ம் தேதி முதல் 21ம் தேதி வரை பிரசாரம் மேற்கொள்கிறார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: