கல்லூரிக்கு சென்ற மாணவி மாயம் செய்யாறு அருகே

செய்யாறு, பிப்.14: செய்யாறு அருகே கல்லூரிக்கு சென்ற மாணவி மாயமானார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ெசய்யாறு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் செய்யாறு அரசு கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை மாணவி வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றார். மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சயடைந்த பெற்றோர் அக்கம்பக்கம், உறவினர் மற்றும் தோழிகளின் வீடுகள் என பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லையாம். இதுகுறித்து மாணவியின் தாய் செய்யாறு போலீசில் புகார் அளித்தார். அன்பேரில் இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகிறார்.

Related Stories: