லாரி மீது ேவன் மோதி டிரைவர் பலி வந்தவாசி அருகே

வந்தவாசி, பிப்.14: வந்தவாசி அருகே லாரி மீது வேன் மோதியதில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். வந்தவாசி அடுத்த கீழ்சாந்தமங்கலம் இந்திரா நகரை சேர்ந்தவர் அமானுல்லா. இவரது மகன் அசாருதீன்(25). இவர் நேற்று காலை இறைச்சி கோழிகளை வேனில் ஏற்றிக்கொண்டு சேத்துப்பட்டு, பெரணமல்லூர் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு சென்றார். அங்கு ேகாழிகளை விற்பனை செய்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு வேனில் வந்து கொண்டிருந்தார். வந்தவாசி- சேத்துப்பட்டு சாலை வங்காரம் கூட்ரோடு அருகே வந்தபோது, எதிரே வந்த லாரி மீது, வேன் மோதியது. இதில் உடல் நசுங்கி படுகாயமடைந்த அசாருதீன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த பொன்னூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: