65 மனுக்களுக்கு உடனடி தீர்வுக்கு நடவடிக்கை அதிகாரிகளுக்கு ஆர்டிஓ உத்தரவு ஆரணியில் மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் பெறப்பட்ட

ஆரணி, பிப். 10: ஆரணியில் மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் பெறப்பட்ட 65 மனுக்களுக்கு உடனடியாக தீர்வுக்காண அதிகாரிகளுக்கு ஆர்டிஓ உத்தரவிட்டுள்ளார். ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று ஆர்டிஓ சிவா தலைமையில் நடந்தது. இதில் ஆர்டிஓ நேர்முக உதவியாளர் மனோகரன், வருவாய் மற்றும் பிறஅதிகாரிகள் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து ஆர்டிஓ சிவா பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று விசாரணை நடத்தினர். இதில் ஆரணி வருவாய் கோட்டத்தில் உள்ள 4 தாலுகாக்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்கள் அளித்தனர். தொடர்ந்து கூட்டத்தில், பட்டா தொடர்பான மனுக்கள், கணினி திருத்தம், ஆக்கிரமிப்பு அகற்றம், பட்டா ரத்து தொடர்பான கோரிக்கை மனு, இலவச வீடு, நெற்களம் அமைக்க, உதவித்தொகை வழங்க கோரி என மொத்தம் 65 கோரிக்கை மனுக்களை ஆர்டிஓ சிவா பெற்று விசாரணை நடத்தினார். தொடர்ந்து அந்த மனுக்களை சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களிடம் வழங்கி உடனடியாக தீர்வுக்காண நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதில், வருவாய் மற்றும் பிறதுறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: