தண்டராம்பட்டு, பிப்.13: தண்டராம்பட்டு அடுத்த வாணாபுரம் ஊராட்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. தண்டராம்பட்டு அடுத்த வாணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம், வட்டார மருத்துவ அலுவலர் செலின்மேரி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய திமுக செயலாளர் கோவிந்தன், தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் ரத்த பரிசோதனை, ரத்த சர்க்கரை அளவு, உப்பின் அளவு, எக்ஸ்-ரே, கண் பரிசோதனை, மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், நுரையீரல் நோய் கண்டறிதல், சித்த மருத்துவம் உள்ளிட்ட 18 பிரிவுகளின் கீழ் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் டாக்டர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஊட்டச்சத்து குறித்து கண்காட்சி வைத்திருந்தனர். இதில் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர்கள் பாஸ்கரன், ரவிச்சந்திரன், பி.டி.ஓ பழனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் வாணாபுரம் ஊராட்சியில்
- ஸ்டாலின்
- வாணபுரம் ஒராட்சி
- Thandarampattu
- சிறப்பு மருத்துவ முகாம்
- வானபுரம் உராட்சி
- தண்டராம்பட்டு
- வனபுரா அரசு மேல்நிலைப்பள்ளி
