கும்மிடிப்பூண்டி, பிப்.14: கும்மிடிப்பூண்டி அருகே விவசாயின் வீட்டில் நுழைந்து 5 சவரன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடுத்து சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே மாநெல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு(60) இவர் நேற்று மதியம் தனது மனைவி ராஜேஸ்வரி(54) என்பவரும் வீட்டை பூட்டிக்கொண்டு, பாதிரிவேடு பகுதியில் உள்ள வங்கிக்கு சென்றார். சாவியை, வீட்டில், மறைவான ஒரு இடத்தில் வைத்து சென்றனர். இரண்டு மணி நேரம் கழித்து, இருவரும் வீடு திருப்பியபோது, கதவு திறந்து கிடந்தது. இதையடுத்து, உள்ளே சென்று பார்த்த ராமு பீரோவில் இருந்த 5 சவரன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பாதிரிவேடு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.
