விவசாயிகள் குறைதீர் கூட்டம் பிப்.17ம் தேதி நடைபெறுகிறது

 

விருதுநகர், பிப்.11: வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் வருவாய் கோட்டங்களில் பிப்.17ல் நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலில், விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் வருவாய் கோட்டங்களில் பிப்.17ம் தேதி, காலை 11 மணி அளவில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சிவகாசி உதவி ஆட்சியர், அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கோட்ட அளவிலான கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொள்வதுடன், விவசாயம் மற்றும் தனி நபர் தொடர்பான மனுக்களை வருவாய் கோட்டாட்சியர்களிடம் நேரடியாக அளித்து தீர்வு காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: