திண்டுக்கல்லில் வருவாய் துறை சங்க கூட்டமைப்பு மறியல்

 

திண்டுக்கல், பிப். 11: திண்டுக்கல்லில் வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மறியல் போராட்டம் நடைபெற்றது. வருவாய் துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சுகந்தி தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜான் பாஸ்டின் முன்னிலை வகித்தார்.  அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முபாரக் அலி கோரிக்கை விளக்க உரை நிகழ்த்தினார். ேபாராட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை நில அளவை துறையில் பணிபுரிந்து வரும் அனைத்து நிலையிலான அலுவலர்களின் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாக்க வேண்டும். சிறப்பு பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும்.

Related Stories: