பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு தம்டகோடி திருமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில்

கண்ணமங்கலம், ஏப்.1: கண்ணமங்கலம் அடுத்த தம்டகோடி திருமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழா நேற்று கோலகலமாக நடந்தது. விழாவையொட்டி காலையில் மூலவருக்கு அபிஷேக ஆரதானைகளுக்கு பின்னர் சிறப்பு ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மாலையில் கோயில் திருமண கூடத்தில் உற்சவ மூர்த்திகளுக்கு திருமண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பின்னர் சுவாமி மணக்கோலத்தில் தங்கத்தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு அறுசுவை திருமண விருந்து பறிமாறப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் ராஜூ தலைமையில் முருகன் அடியார்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Related Stories: