10அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் தர்ணா

தர்மபுரி, பிப்.3:தர்மபுரி மாவட்ட தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில், 10அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி நேற்று அரைநாள் தர்ணா போராட்டம் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடந்தது.மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் சந்திரன் சிறப்புரையாற்றி பேசினார். தர்ணாவில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர், வருவாய் கிராம ஊழியர், வனத்துறை காவலர் மற்றும் ஊராட்சி எழுத்தர் உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியமாக ₹7850 வழங்க வேண்டும். ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கைவிட வேண்டும் உள்ளிட்ட 10அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில், மோகன்ராஜ், பெருமாள், விஜயன், ஆறுமுகம், சுந்தரமூர்த்தி, சுப்பிரமணியம், நாகை பாலு, கிருஷ்ணமூர்த்தி, கேசவன், கோபால், துரை, சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: