நரசைய்யர் குளத்தை தூர்வார வேண்டும்

தர்மபுரி, பிப்.3:தர்மபுரி டவுன் கந்தசாமி வாத்தியார் தெருவில் நரசைய்யர் குளம் உள்ளது. அன்னசாகரம் ஏரியில் இருந்து மழை நீர் மாறுகால்வாய் வழியாக நரசைய்யர் குளத்திற்கு வந்து நிரம்பும். கடந்த 30ஆண்டுகளுக்கு முன்பு வரை நரசைய்யர் குளம் நீர் நிரம்பி காணப்பட்டது. காலப்போக்கில் நீர் வரும் பாதையில் ஆக்கிரமிப்பு, குளத்தை சுற்றிலும் ஆக்கிரமிப்புகளால் குளம் இருக்கும் இடமே பலருக்கு தெரியாத நிலை ஏற்பட்டுவிட்டது. நகராட்சி வசம் உள்ள இந்த குளத்தை தூர்வாரி, மழைநீர் சேமிப்பு தொட்டியாக மாற்ற வேண்டும். குளத்தை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நரசைய்யர் குளத்தின் உள்ளே கொட்டப்பட்டுள்ள குப்பைகள் மற்றுச் சாக்கடை கழிவுநீரை அகற்றி, மழைநீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: